தி.மு.க., மாஜி அமைச்சர் மகனுக்குக்கு ஏழு ஆண்டு சிறை

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:10 am
dmk-ex-minister-s-son-gets-7-years-jail-term-in-a-money-laundering-case

சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட, தி.மு.க., மாஜி அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் அமைச்சரருமான கோ.சி.மணியின் மகன், மணி அன்பழகன். இவர், சட்ட விரோத முறையில், வெளிநாடுகளுக்கு, 78 கோடி ரூபாய் பணம் அனுப்பியதாக புகார் எழுந்தது. 

இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்ததில், உரிய ஆவணங்கள் இன்றி, மணி அன்பழகன், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், மணி அன்பழகனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, விரைவில் வேட்பாளர் பட்டியலும் வெளியாகவுள்ள நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த, மாஜி அமைச்சரின் மகன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அந்த கட்சித் தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close