கோயில் சொத்துகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 08:21 pm
court-order-about-temple-properties

கோயில்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொருட்டு, கோயில் நிலங்கள் மற்றும் அவற்றின் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை  மீட்கவும், அங்கு அடிப்படை வசதிகளை செய்துதர உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

மேலும், கோயில் சொத்துகள் குறித்த விவரங்களை புத்தகமாக அச்சடித்து மக்கள் பார்வைக்கும், கோயில் அலுவலகத்திலும் வைக்க வேண்டும். அப்புத்தகங்களை பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close