நீதிபதி முன்பு மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 04:13 pm
husband-arrested-in-court

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில்  நீதிபதி முன்பு கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், சரவணன், மற்றும் வரலட்சுமி தம்பதி குடும்ப பிரச்னை காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நீதிபதி கலைவாணன் இருவரை சமரசபடுத்துவதற்காக பேசவிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நீதிமன்ற அறையில் பேசிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையடுத்து நீதிபதி சமரசம் செய்வதற்குள் ஆத்திரமடைந்த சரவணன் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்த வரலட்சுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சரவணனை போலீசார் கைது செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close