இரட்டை இலை சின்னம் பெற, லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி., தினகரனிடம் குரல் மாதிரி எடுக்க மார்ச், 30 வரை தடை விதித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து தினகரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலைபெற்றது. அப்போது, தினகரனிடம் இருந்து குரல் மாதிரி எடுக்க மார்ச் 30ம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்து. மேலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு, மார்ச் 27ம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
newstm.in