நீரிழிவு நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க திட்டம் ஏதும் உள்ளதா? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 02:09 pm
madurai-high-court-asked-centre-for-diabetic-patients

நீரிழிவு நோயாளிகள் அதிகரித்துவரும் சூழலில் இவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க திட்டம் ஏதும் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தாக்கல் செய்த பொதுநல மனுவில், "இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் சிறுவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டுள்ளனர்.

சிறுவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கபடும் போது சரியான நேரத்தில் உணவு விகிதத்தை கடைபிடிப்பது மற்றும் இன்சுலின, மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.

சக்கரை நோய் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சர்க்கரை நோய் பரிசோதனை கருவி, பரிசோதனை ஸ்டிரிப், மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை பொதுத்தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதி மறுக்கின்றனர். இதனால் சக்கரை அளவு குறையும் போதோ அல்லது கூடும் போதோ மாணவர்களின் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போகும்

எனவே பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு அறைகளுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உணவு மற்றும் தேவையான மருந்து பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ நிபுணர்கள் நேரில் ஆஜராகி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சில அத்தியாவசிய தேவைகள் உள்ளது. அவை தாமதமானால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், 

1.தமிழகத்தில் மொத்தம் எத்தனை நீரிழிவு நோயாளிகள் உள்ளனர்?
2. இந்தியாவில் மொத்தம் எத்தனை நீரழிவு நோயாளிகள் உள்ளனர்?
3. அவர்களுக்கான போதிய மருத்துவ வசதிகள் தாலுகா மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ளனவா?
4. சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவர்கள் உள்ளனரா?
5. தேர்வுகளின்போது சர்க்கரை நோயாளிகள் குளுக்கோமீட்டர் பொருத்தி செல்ல அனுமதிக்கலாமா?
6. வருங்காலங்களில் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகளை எழுதிச் செல்லும் நீரிழிவு நோயாளிகள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கலாமா?
7. நீரிழிவு நோயாளிகள் அதிகரித்துவரும் சூழலில் இவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க திட்டம் ஏதும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து,  மத்திய அரசு இதற்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close