தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

  ராஜேஷ்.S   | Last Modified : 25 Mar, 2019 12:42 pm
can-not-give-a-cooker-icon-in-dinakaran-party-election-commission

அமமுகவிற்கு பொது சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக வேறு சின்னத்தை ஒதுக்கி தருகிறோம் என்றும் கூறியுள்ளது.

குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது, அமமுகவிற்கு பொது சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்றும், பதிவு பெற்ற கட்சிகளுக்கு மட்டும்தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என்றும், நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக வேறு சின்னத்தை ஒதுக்கி தருகிறோம் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close