முன்னாள் அமைச்சரின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

  ராஜேஷ்.S   | Last Modified : 25 Mar, 2019 01:16 pm
former-minister-imprisonment-stop

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து அவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டி மீதான விசாரணைக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஒசூர் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close