டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம் 

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 07:43 pm
we-can-t-give-the-cooker-symbol-to-ttv-dinakaran-ec-to-sc

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால், அவர்களுக்கு, 40 தொகுதிகளிலும் பொது சின்னம் வழங்க முடியாது என, உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுக என தனி அமைப்பை துவங்கி நடத்தி வரும் டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள், வரும் மக்களவை தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் களம் காண்கின்றனர். 

அமமுக சார்பில் போட்டியிடும் அனைவருக்கும் பொதுவான சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி, தினகரன் சார்பில் கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், இதுகுறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று 300 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. 

அதில், அமமுக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும், பதிவு செய்யப்படாத ஒரு கட்சிக்கு பொது சின்னம் வழங்க முடியாது என்றும் கூறியுள்ளது. எனவே, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

அதே போல், அவர்கள் அனைவருமே தங்கள் தொகுதிகளில், குக்கர் சின்னம் கோரி விண்ணப்பித்தாலும், அதே தொகுதியில் போட்டியிடும் பிற சுயேட்சைகள் அதே சின்னத்தை கேட்டு விண்ணப்பித்தால், குலுக்கல் முறையில் மட்டுமே சின்னம் ஒதுக்கீடு செயயப்படும். 

எனவே, தினகரன் ஆதரவாளர்கள் அனைவருக்கும், குக்கர் சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close