கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேச தடை கோரிய மனு தள்ளுபடி!

  Newstm Desk   | Last Modified : 01 Apr, 2019 01:42 pm
petition-against-stalin-is-canceled

பிரச்சாரத்தின் போது கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பேச தடைகோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது, கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் பழனிசாமியை தொடர்புபடுத்தி பொய் பிரச்சாரம் செய்வதாகவும், பிரச்சாரத்தின் போது கொடநாடு விவகாரம் தொடர்பாக பேச தடை கோரியும் அதிமுக செய்தி தொடர்பாளர் முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, கொடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்படுத்தி மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பாக திமுக பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறியதையடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டடுள்ளது 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close