ஜெ.சிகிச்சை குறித்து விசாரிக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 11:09 am
there-is-no-objection-to-inquiry-of-jeyalalitha-treatment-high-court

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்க கோரி அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர். சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி விசாரணைக்கு வந்தது. அப்போது, 21 துறைகளை சேர்ந்த மருத்துவ குழுவை அமைக்காமல் விசாரணை நடத்த கூடாது என்று அப்போலோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 90% விசாரணை முடிந்துள்ளதால் மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த முடியாது என கூறி ஜெயலலிதா சிகிச்சை குறித்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.   

அதேநேரத்தில், ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா சிகிச்சை குறித்து வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அப்போலோ வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

newstm.in 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close