மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற தடை!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 05:57 pm
sc-cancels-tn-govt-order-for-shops-to-be-shifted-from-temples

தமிழகத்தில் கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 பிப்ரவரி மாதம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கோவில் வளாகங்களில் உள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த வணிகர்கள் பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், தமிழக அரசாணைப்படி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கடைகளை அகற்றும் தமிழக அரசின் அரசாணை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஆகிய இரண்டையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், அறநிலையத் துறை சட்டம் 1959 -ன் அடிப்படையில், கோவில் கடைகளை அப்புறப்படுத்துவதற்கான சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி கடை உரிமையாளரிடம் கருத்து கேட்டு விட்டு அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close