முதல்வர், ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 07:12 pm
chennai-high-court-adviced-to-cm-and-stalin

கோடநாடு விவகாரத்தில் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் பழனிசாமியை தொடர்புப்படுத்தி பொய் பிரச்சாரம் செய்வதாகவும், பிரச்சாரத்தின்போது கொடநாடு விவகாரம் தொடர்பாக பேச தடை கோரியும் அதிமுக செய்தி தொடர்பாளர் முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை  தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 1- ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொடநாடு விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்,   எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் இன்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், இருதரப்பினரின் இறுதி வாதத்துக்காக, இவ்வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close