ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு: பொது மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 03:15 pm
railway-land-aggressive-case

ஆக்கிரமிப்பில் உள்ள ரயில்வே நிலங்கள், மற்றும் ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த பிரபாகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், " தமிழகத்தில் பிளக்ஸ் போர்டு, பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. ஆனால், ரயில்நிலைய வளாகத்தில் சில அமைப்புகள் சார்பாக அரசியல் தலைவர்கள், தனியார் அமைப்பு தலைவர்களை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் போர்டு, பேனர்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டுள்ளது.

இவற்றால் ரயில் பயணிகளுக்கும்,  பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. ரயில்வே துறைக்கு சொந்தமான சுவர்கள் மற்றும் சுற்று சுவர்களில், சுவர் விளம்பரம் மற்றும் அரசியல் விளம்பரங்கள் வரைந்துள்ளனர். இதற்கு வாடைகையோ, கட்டணமோ எதுவும் செலுத்துவதில்லை. பல தனியார் அமைப்புகள் சட்டவிரோதமாக ரயில்வே நிலங்களை ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரப்பு நிலங்களுக்கும் வாடகை தருவதில்லை.

அனைத்து ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் அனுமதி பெற்று மற்றும் அனுமதி பெறாமல் வைக்கபட்டுள்ள பிளக்ஸ் போர்டு, பேனர் மற்றும் சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும். மேலும் பேனர்கள் வைக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும் "என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்பில் உள்ள ரயில்வே நிலங்கள், மற்றும் ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பிளேக்ஸ் போர்டுகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஏப்ரல் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close