திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் வழக்கு தள்ளுபடி

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Apr, 2019 05:10 pm
dmk-candidates-kanimozhi-kadir-anand-disqualification-case

திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஆரத்தி எடுக்கும்போது பணம் கொடுத்ததாக கனிமொழி தரப்பினர் மீதும், காட்பாடியில் வருமானவரி சோதனையின்போது, ரொக்கம் மற்றும் தேர்தல் வாக்குச் சாவடி தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கதிர் ஆனந்த் மீதும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று அப்துல்லா சேட்டின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close