நீட் தேர்வுக்கு மட்டும் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு அனுமதி

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Apr, 2019 07:29 pm
allow-the-special-training-class-only-for-the-neet-exam

தனியார் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,  11,12-ஆம் வகுப்புகளுக்கு நீட் மற்றும் சிறப்பு நுழைவுத்தேர்வுக்கு மட்டும் பயிற்சி வகுப்பு நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி விஜயகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்திருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரிலேயே சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது என்று அரசு தெரிவித்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கோடை விடுமுறையில்தான் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனியார் பள்ளிகளில் 11,12-ஆம் வகுப்புகளுக்கு நீட் மற்றும் சிறப்பு நுழைவுத்தேர்வுக்கு மட்டும் பயிற்சி வகுப்பு நடத்தலாம் என்றும், வேறு எந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், இவ்வழக்கை முடித்து வைத்தது.

newstm.in
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close