வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு: இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 02:04 pm
vellore-election-case-in-madras-hc

வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கு எதிரான, அதிமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, இன்று மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பணப்பட்டுவாடா காரணமாக, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் முறையீடு செய்ததன் அடிப்படையில், இன்று காலை 10.30 மணிக்கு அவசர வழக்காக விசாரணை நடைபெற்றது. 

நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையில், ஏ.சி. சண்முகம் தரப்பில், 'ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது' என வாதிடப்பட்டது. 

பின்னர் நீதிபதிகள், 'தேர்தலை ரத்து செய்யக் கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா?'  என கேள்வி எழுப்பினர். மேலும், 'குறிப்பிட்ட  சில வேட்பாளர்களை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும்? அவ்வாறு தகுதி நீக்கம் செய்த பின் அவர் பணப்பட்டுவாடா செய்யவில்லை என நிரூபித்தால் அப்போது தவறாகி விடாதா? வெற்றிபெற்ற வேட்பாளரை மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவச்சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்' என்று கூறியிருந்தனர். 

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close