வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பான மனுக்கள் தள்ளுபடி

  ராஜேஷ்.S   | Last Modified : 17 Apr, 2019 06:01 pm
vellore-constituency-canceled-the-cancellation-case

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாரன், தேர்தல் ஆணையத்தால் வேலூர் மக்களவை தொகுதி ரத்து செய்யப்பட்டதை  எதிர்த்து, மீண்டும் அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று காலையே முடிவடைந்த நிலையில்,  மாலை 4.30 மணிக்கு தீர்ப்பை  ஒத்தி வைப்பதாக நீபதிகள் தெரிவித்திருந்தனர். 

அதன் தொடர்ச்சியாக, இன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், " பணம் பறிமுதல் செய்ததையடுத்து, அவை வாக்களர்களுக்கு முறைகேடாக வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்தது , சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக நிரூபணமானதாக தேர்தல் ஆணையம் கூறி்யிருந்தது உறுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதையடுத்து குடியரசுத் தலைவர் அனுமதியுடன் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து  செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் முறைப்படி உத்தரவிட்டது.  எனவே, தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவு சட்டபூர்வ நடைமுறையைப் பின்பற்றியே அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் அதனடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ரத்து உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டு, மனுதாரர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close