’டிக்-டாக்’ செயலிக்கு தடை நீக்கம், ஆபாச வீடியோக்களை பதிவேற்றக் கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை!

  முத்து   | Last Modified : 24 Apr, 2019 07:01 pm
tick-talk-processor-can-not-be-uploaded-do-not-upload-porn-videos-court-warning

’டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தவும், தரவிறக்கம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையை நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று நீக்கி உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் டிக்-டாக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இளைஞர்களின்  நலன்கருதி டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் முத்துக்குமார் தொடர்ந்த வழக்கில், சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களையும், சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களையும் டிக்-டாக்கில் பதிவேற்றக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற தடைக்கு பின் சுமார் 6 மில்லியன் சர்சைக்குரிய வீடியோக்கள்  நீக்கப்பட்டுள்ளன என்று நீதிமன்றத்தில் தெரிவித்த டிக்-டாக் நிறுவனம், செயலி தொடர்பாக இந்தியாவிலிருந்து வரும் புகார்களை விசாரிக்க தனி நோடல் அலுவலர்  நியமிக்கப்பட்டுள்ளார். ஆபாச வீடியோக்களை பதிவேற்றினால் செல்போனில் இருந்து டிக்-டாக் தானாக செயலிழந்துவிடும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்துள்ளோம் என்றும் உறுதி அளித்துள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close