களவாணி - 2 படத்தை வெளியிட தடை நீங்கியது: நீதிமன்றம் உத்தரவு

  முத்து   | Last Modified : 25 Apr, 2019 05:17 pm
kalavani-2-does-not-restrict-the-release

களவாணி - 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. இப்படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் தொடர்ந்த வழக்கில் தடையை நீக்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

களவாணி - 2 திரைப்படத்தின் தலைப்பு தங்களுடையது என உரிமை கோரி, இப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்தில் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து, தடையை நீக்கக் கோரி, களவாணி - 2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், களவாணி - 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் முதல் பாகம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  கிராமத்தில் இருக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞனும், அவனுடன் 4 நண்பர்கள் சேர்ந்து செய்யும் அளப்பறைகள் என நகைச்சுவையாக இப்படம் இருக்கும். ’ஆனி போய், ஆவனி போய் ஆடி வந்தா என் மகன் டாப்பூல வருவான்’ என படத்தில் சரண்யா அடிக்கடி சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது.

களவாணி முதல் பாகத்தில் ஓவியா யாரே என்று தெரியாது. அதன் பிறகு பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமாகி ஓவியா ஆர்மி, ஏராளமான ரசிகர்களை கொண்ட பிறகு ஓவியா நடிப்பில் களவாணி - 2  படத்தை ஓவியா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.  சமீபகாலமாக ஹீட் கொடுக்காமல் தவித்து வரும் விமலுக்கு இப்படம் நல்ல ஹிட்டை கொடுக்கும் என நம்பிக்கையுடன் விமலும் இருக்கிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close