வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த வட்டாட்சியரை எதிர்த்து சி.பி.எம்., வேட்பாளர் முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2019 11:11 am
cpm-candidate-complaint-against-madurai-staff-in-chennai-high-court

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் அத்துமீறி நுழைந்ததை எதிர்த்து சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். 

மதுரை மாவட்டத்தில் வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருந்த அறையில், வட்டாட்சியர் சம்பூரணம் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன், அத்துமீறி நுழைந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை எனவும், இடை நீக்கம் செய்தது போதாது. குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 

இதையடுத்து, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உறுதியளித்தது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close