மதுரை ஆட்சியரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

  முத்து   | Last Modified : 27 Apr, 2019 07:59 pm
high-court-orders-to-change-madurai-collector

மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில் புலனாய்வு விசாரணை கோரி மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்றக் கோரியும், உதவி தேர்தல் அதிகாரி, காவல் உதவி ஆணையரையும் மாற்றக் கோரியும்,  மதுரை ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி தேர்தல் அதிகாரி, காவல் உதவி ஆணையரையும் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அதிகாரிகளை மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close