நீட் தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தனி அறைகள்

  முத்து   | Last Modified : 27 Apr, 2019 08:53 pm
need-exam-single-rooms-for-testing-students

நீட் தேர்வு எழுதும் மாணவிகளை சோதனை செய்ய தனி அறைகள் ஏற்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மாணவ, மாணவிகளுக்கு தமிழகத்திலேயே  நீட் தேர்வு எழுதும் மையம் அமைக்க கோரி ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு மையங்களில் மாணவிகளை சோதனை செய்ய தனி அறைகள் இல்லாததால் மாணவிகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்தார்.  

இதையடுத்து, நீட் தேர்வு எழுதும் மாணவிகளை சோதனை செய்ய தனி அறைகள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது தனி அறைகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில்  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று ராம்குமார் ஆதித்யன் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close