பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு

  முத்து   | Last Modified : 30 Apr, 2019 04:01 pm
court-order-to-provide-employment-to-those-with-disabilities

காவல் துறையில் தேர்வில் வெற்றி பெற்றும், பார்வை குறைபாடு காரணமாக பணி வழங்க மறுக்கப்பட்டோருக்கு பணி வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பார்வை குறைபாடால் தொழில்நுட்ப பிரிவு, கைரேகை பிரிவு சார்பு ஆய்வாளர்களுக்கான பணி வழங்க மறுத்ததாக ராஜதுரை என்பவர் உள்பட 15 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சார்பு ஆய்வாளர் பணிக்கு முழு பார்வை திறன் இருக்க வேண்டும் என்பது விண்ணப்பத்தில் கூறியிருக்க வேண்டும். விண்ணப்பத்தில் தெரிவிக்காமல் நேர்முகத்தேர்வு முடிந்த பிறகு தெரிவித்தது சரியான வழியல்ல என தெரிவித்த நீதிபதி, பார்வை குறைபாடு காரணமாக பணி மறுக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்க உத்தரவிட்டார்.

மேலும், எதிர்காலத்தில் அரசு உத்தரவு, நிபந்தனை இருந்தால், தேர்வு குறித்த அறிவிப்பாணையின்போதே தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close