பச்சையப்பன் கல்லூரி வழக்கு: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு தடை

  ராஜேஷ்.S   | Last Modified : 30 Apr, 2019 05:48 pm
pachaiyappa-college-case-the-ban-on-bribery-allegations

சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் தொடர்பான முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், கல்லூரி முதல்வர் சேட்டுவின் நியமனம் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடையில்லை என தெரிவித்துள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  முதல்வர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, ரத்து செய்த நீதிமன்றம், அதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணை செய்ய உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சேட்டு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் தொடர்பான முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்பு விசாரிக்க தடையும், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க தேர்வு குழுவிற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், முதல்வர் கல்லூரி முதல்வர் சேட்டுவின் நியமனம் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close