கட்சிக்கொடி வாகனங்கள் சாலை விதிகளை மதிப்பதில்லை : காவல் துறை வருத்தம்

  ராஜேஷ்.S   | Last Modified : 30 Apr, 2019 08:49 pm
party-flag-vehicles-do-not-respect-the-rules

கட்சிக்கொடிகள், பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

விபத்துகளை தடுக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஸ்டாலின் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், டிஜிபி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ’கட்சிக்கொடிகள், பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. கட்சிக் கொடி வாகனங்கள் சுங்கக் கட்டணங்களை செலுத்தாமல் சண்டையிடும் சூழல் உள்ளது. கட்சிக்கொடி, பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்களை பரிசோதிக்க சில காவல்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். வாகன சோதனை செய்யப்படாதபோது சட்டவிரோத செயல்களுக்கு அது வழிவகுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனங்களில் கட்சிக்கொடி, பதவிகளை எழுதிக்கொள்ள மோட்டார் வாகன சட்டப்படி அனுமதியில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close