விளக்கம் கேட்காமல் பணியிட மாற்றம் : முன்னாள் மாவட்ட ஆட்சியர் முறையீடு

  முத்து   | Last Modified : 30 Apr, 2019 10:37 pm
dismissal-without-explanation-former-collector-s-appeal

தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல், தாம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையிட்டுள்ளார்.

மதுரையில், வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி ஒருவர் நுழைந்த விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றக் கோரி, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை மாற்ற வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து அவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல், தம்மை  பணியிட மாற்றம் செய்துள்ளதாக நடராஜன் முறையிட்டார். மேலும், பணியிட மாற்ற உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டுமென்றும் அவர் கோரினார். இதையடுத்து, இந்த வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close