தமிழக சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை!

  அனிதா   | Last Modified : 06 May, 2019 12:07 pm
provisional-ban-on-notices-sent-by-speaker

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுக கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி 3 பேருக்கும் தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சுமார் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த விசாரணையில், சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியது குறித்து விளக்கமளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு உத்தரவிட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close