மார்ட்டின் நிறுவன காசாளர் மரணம்: சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு

  அனிதா   | Last Modified : 07 May, 2019 01:09 pm
martin-cashier-death-case-petition-to-cbcid-investigate

மார்டின் நிறுவன காசாளர் பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவன காசாளராக பணிபுரிந்து வந்தவர் பழனிசாமி. இவர் வருமானவரித் துறை விசாரணை முடிந்த அடுத்த நாள் (மே.4) காரமடை அருகே உள்ள குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. 

இந்நிலையில், காசாளர் பழனிசாமியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது மகன் ரோஹின் குமார் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், அந்த மனுவில் தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close