பொள்ளாச்சி குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்தது ஏன்? பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

  அனிதா   | Last Modified : 08 May, 2019 01:15 pm
why-did-filed-thug-act-for-pollachi-criminals

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது குறித்து  தமிழக உள்துறை செயலாளர், கோவை ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசர் மற்றும் சபரிராஜன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்களது தாயார் லதா, பரிமளா ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் என்றும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து விசாரணை மேற்கொண்டதை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனவும் அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, இதுகுறித்து  தமிழக உள்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close