அந்நிய செலாவணி வழக்கு: காணொலி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி!

  ராஜேஷ்.S   | Last Modified : 09 May, 2019 10:17 pm
direct-response-to-a-video-viewer-sasikala

அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணைக்கு, காணொலிக் காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணம் வாங்கியது தொடர்பான வழக்கில், சசிகலா மே 13 -ஆம் தேதி  நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டுமென என சசிகலா தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா காணொலிக் காட்சியில் ஆஜராகி பதிலளிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close