ராணுவ வீரர்களின் வாரிசுகளை சேர்க்க உத்தரவு; ‘அபிநந்தன் உண்மையான ஹீரோ’

  ராஜேஷ்.S   | Last Modified : 10 May, 2019 06:50 pm
soliders-heirs-join-mbbs-court-order

நடப்பு கல்வியாண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இடஒதுக்கீட்டு பிரிவில், பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பணியில் உள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னூரிமை அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் வழங்கக் கோரி மாணவர் குறளரசன் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, நடப்பு கல்வியாண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இடஒதுக்கீட்டு பிரிவில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனுடன், முன்னுரிமை பட்டியலில் 7 முதல் 9 வரையிலான முன்னுரிமை பட்டியலை தமிழக அரசு நீக்கியதை ரத்தும் செய்தது.

அபிநந்தன் உண்மையான ஹீரோ 

மேலும், இவ்வழக்கு தொடர்பாக  உயர்நீதிமன்ற கிளை விடுத்துள்ள உத்தரவில், ‘தற்போது மக்களால் உண்மையான ஹீரோவாக விங்கமாண்டர் அபிநந்தன் பார்க்கப்படுகிறார். அபிநந்தனின் மகள் தற்போது அரசு மருத்துவ கல்லூரியில் ராணுவ இடஒதுக்கீட்டு பிரிவில் சேரநினைத்தால் முடியாது.

பாகிஸ்தானில் இருந்து திரும்பியதும் பதவியிலிருந்து விலகி இருந்தால் அபிநந்தன் முன்னாள் வீரராகியிருப்பார். பணியாற்றியவர்களுக்கு கிடைக்கும் சலுகை படைப்பிரிவில் தற்போது பணியாற்றுவோருக்கும் கிடைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் முன்னாள் ராணுவ வீரர், பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசு என்ற பாகுபாடு கூடாது’ என்று  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close