தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மனு!

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2019 04:13 pm
kamal-files-petition-in-madras-hc

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மனு அளித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். 

கமல் இவ்வாறு பேசியதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கமல் மீது திருச்சி மற்றும் அவரைக்குறிச்சி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளித்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தற்போது விடுமுறைக் காலம் என்பதால் விசாரணைக்கு தடை கோரும் வழக்கை இப்போது விசாரிக்க முடியாது என்றும், வேண்டுமானால் முன்ஜாமீன் கோரி மனு அளித்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பதில் தெரிவித்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close