விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசாணைக்கு இடைக்காலத்தடை!

  முத்துமாரி   | Last Modified : 15 May, 2019 05:22 pm
madurai-hc-interim-ban-for-farmers-land-acquisition

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடியில் உள்ள இரு தனியார் நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஆணை வெளியிட்டது. இதற்காக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சூழ்நிலை உருவானது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும், நிலங்களுக்கு இழப்பீடாக அளிக்கப்பட்ட பணத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.  இதையடுத்து மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில், எரிவாயு குழாய் பதிப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close