கமலுக்கு எதிரான மனுவை நீதிமன்றம் ஏற்க மறுப்பு!

  முத்துமாரி   | Last Modified : 16 May, 2019 11:36 am
madurai-court-rejected-plea-against-kamal-haasan

மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்க மறுத்துள்ளது. 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கமல் மீது திருச்சி மற்றும் அவரைக்குறிச்சி காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, கமல் ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மனு அளித்தார். ஆனால், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, அவரது மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

முன்னதாக, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close