ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

  முத்து   | Last Modified : 18 May, 2019 04:31 pm
schools-should-not-insist-schools-to-buy-a-luggage-bag-high-court-order

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்த கூடாது என்று தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பாடப்புத்தகங்களுக்கு ரூ.5,000, சீருடை, லஞ்ச் பை போன்ற பொருட்களுக்கு ரூ.5,000 கேட்பதாக, ஹேமலதா என்பவர், கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்த கூடாது. மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை பள்ளிகளே விற்கலாம். ஆனால் பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என்று தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கை ஜூன் 10-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close