ஐங்கரன் பெயரில் உணவகம் நடத்த உயர்நீதிமன்றம் தடை

  முத்து   | Last Modified : 18 May, 2019 08:20 pm
the-high-court-bans-the-restaurant-in-the-name-of-aingran

ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சையில் 2 கடைகள் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடைகோரி, ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகத்தின் பங்குதாரர் ராமச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் பெயருக்கு காப்புரிமை சட்டத்தின் கீழ் உரிமம் பெறப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்றுள்ளதால் கும்பகோணம் ஐங்கரன் பெயரில் வேறு யாரும் உணவகம் மற்றும் கடைகளை நடத்த முடியாது. வர்த்தக உரிமைக்கு எதிராக எங்கள் உணவகத்தில் பெயரில் சிலர் உணவகம் நடத்தி வருகின்றனர் என்று மனுதாரர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, தஞ்சை கீழவாசல், வடக்கு தெருவில் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் உணவகம் நடத்தும் 2 பேரும், இந்த பெயரில் உணவகம் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்,  2 பேரும் பதில் தரவும் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close