கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன்!

  அனிதா   | Last Modified : 20 May, 2019 12:34 pm
bail-to-kamal-haasan

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியுள்ளது. 

அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல காவல்நிலையங்களில் 76 புகார்கள் பதிவாகியிருந்தன. இதையடுத்து கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபந்தனைகளுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 15 நாட்களுக்குள்ளாக குறிப்பிட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி  2 நபர்களின் உத்தரவாதத்துடன் ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close