பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 22 May, 2019 12:42 pm
madras-hc-ordered-repoll-for-ponparappi

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தற்போது தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், பொதுமக்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. 

இந்நிலையில், தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டதால், சுமார் 300 பேர் வரையில் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றும் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், தற்போது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியாது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் தெளிவாக தனது முடிவை கூறிவிட்டார். தேர்தல் விஷயத்தில் அதுவும் தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். 

மேலும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தேர்தல் வழக்காக வேண்டுமானால் தொடரலாம் என்று தெரிவித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close