வாக்கு வித்தியாசம் இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்தகோரிய முறையீடு நிராகரிப்பு!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 10:36 pm
if-the-vote-difference-to-hold-re-election-rejection-of-appeal

வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் இடையே வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிய முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம்  நிராகரித்தது.

மக்களவை தேர்தல் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமிகிருபா சார்பில் வழக்கறிஞர் ஸ்வரூப் என்பவர், வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் இடையே வித்தியாசம் வந்தால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என முறையிட்டார். 

ஆனால், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியதாக முறையீட்டை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரது முறையீட்டை நிராகரித்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close