பாலியல் வன்கொடுமை வழக்கு: தனி நீதிமன்றம் அமைக்கக் கோரி மனு

  முத்து   | Last Modified : 03 Jun, 2019 06:45 pm
sexual-abuse-case-the-petition-to-set-up-a-separate-court

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கக் கோரி  கிருஷ்ணப்ரியா பவுண்டேஷன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கக் கோரி சசிகலாவின் உறவினர் கிருஷ்ண ப்ரியாவின் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது, பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காவல் நிலையத்தில் ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்தார்.

இதையடுத்து, இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஜூன் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close