கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

  அனிதா   | Last Modified : 04 Jun, 2019 12:35 pm
compulsory-helmet-case

கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதற்கு மறுப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை  குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை எனவும், பைக் ரேஸில் உயிரிழப்பு ஏற்படுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். 

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடும் வெயில் காரணமாக ஹெல்மெட் அணிய வாகன ஓட்டிகள் மறுப்பதாகவும், பைக் ரேஸ் தடுக்க காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இதையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து போக்குவரத்து காவல்துறையின் இணை மற்றும் துணை ஆணையர்கள் ஜூன் 6ஆம் தேதில் நேரில்ஆஜராகி பதில் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close