ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்; வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 06:27 pm
sterlite-case-hearing-by-another-bench-in-madras-hc

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகிய நிலையில், வழக்கானது  நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் மூடியதை அடுத்து, அதற்கு எதிராக, ஆலையை திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி சசிதரன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. 

இந்த சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று கூறி நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவித்தார். மேலும், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படியும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடியதற்கு எதிரான வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பிரமணியம் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் புதிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close