தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 01:29 pm
vaiko-released-from-case

தமிழக அரசு தொடர்ந்த இரண்டு அவதூறு வழக்குகளில், ஒரு வழக்கில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக  அரசு தன் மீது தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். 

கடந்த 2006ம் ஆண்டு கூட்டத்தில் பேசிய வைகோ, மதிமுகவை உடைக்க திமுக சதி செய்ததாக கருணாநிதி மீது குற்றஞ்சாட்டி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் ஒன்றை எழுதினார். இதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. 

இதே போன்று 2009ம் ஆண்டு சென்னையில் இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி தான் காரணம் என வைகோ பேசினார். இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை மாதம் 5-ம் தேதி வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தான், அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ள நிலையில், பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர், அதே நேரத்தில் கருணாநிதியை குற்றஞ்சாட்டிய வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close