இலங்கை அகதிகள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 05:28 pm
sri-lankan-refugees-who-come-to-india-for-fear-of-life-can-apply-for-citizenship

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 65 பேரும் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும், குடியுரிமை விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பிவைக்குமாறும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 65 பேர் இந்திய குடியுரிமை கோரி  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையின்போது, மனுதாரர்களின் நிலையை பார்க்கும்போது தன் ரத்தம் கசிவதாக வேதனையுடன் தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

மனுதாரர்கள் இந்திய குடியுரிமை கேட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து, குடியுரிமை விண்ணப்பங்களை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் மீது மத்திய அரசு 16 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும், மனுதாரர்கள் உயிருக்கு பயந்து இந்தியா வந்தவர்கள் என்பதை கருத்தில் கொண்டு பரிசீலிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, வழக்கின் விசாரணையின்போது, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என மத்திய, மாநில அரசுகள் வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close