மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2019 09:07 pm
mammool-collections-bribery-cops-court-action-warrant

மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்று இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

‘தமிழகத்தில் காவல்துறையினர் பொதுஇடங்களில் மாமூல் வசூலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று. மாமூல் வசூலிப்பது காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. காவல்துறையினரின் செயல்பாடு இப்படி இருக்கும்போது மக்கள் எப்படி போலீசாரை மக்கள்  நண்பர்களாக பார்ப்பார்கள்’ எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், காவல் நிலையங்கள், பொது இடங்களில் மாமூல் வசூலிப்பதை கட்டுப்படுத்த சுற்றறிக்கை, உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close