சுயமரியாதை திருமணமும் இந்து திருமணம் தான்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 08:53 pm
self-respecting-marriage-is-hindu-marriage-court-orders-action

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு திருமண ஊக்கத்தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

சிவகுமார் - நிவேதா, செல்வின் தியாகராஜன் - சரண்யா கனிமொழி உள்ளிட்ட 3 தம்பதிகள் இந்து முறைப்படி திருமணம் செய்யவில்லை எனக் கூறி, அவர்களுக்கு மறுக்கப்பட்ட அரசின் உதவித்தொகையை  வழங்கக்கோரி, முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து திருமணம் சாஸ்திர சம்பிரதாயங்களுடன் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளது. மாலை மாற்றிக்கொள்வதும், சீர்த்திருத்த, சுயமரியாதை திருமணமும் இந்து சட்டப்படியான திருமணம்தான் என்று தெரிவித்த நீதிபதி, சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு திருமண ஊக்கத்தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close