20 வாரத்திற்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட அவசியமில்லை

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 09:01 pm
there-is-no-need-for-the-court-to-dissolve-the-fetus-for-less-than-20-weeks

பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண், அந்த கருவைக் கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20 வாரத்திற்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட வற்புறுத்துவதாக, பாலியல் வன்கொடுமையால் உருவான கருவைக் கலைக்க, சென்னையை சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சட்டப்படி, 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே மருத்துவ குழுவின் ஆலோசனை பெற வேண்டும் என்றும், கருக்கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மத்திய அரசின் சட்டங்கள் குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருக்கலைப்பு குறித்து, போலீசாருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close