சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை, அரசியல்வாதிகள் தவறு செய்தால்...!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 04:41 pm
punishment-if-ordinary-men-do-wrong-cutoutcase

சட்டவிரோத பேனர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தையே தமிழக அரசு சோர்வடைய செய்துவிட்டது என்றுசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

டிராபிக் ராமசாமி தொடர்ந்த  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,  சாதாரண மனிதர்கள் தவறு செய்யும்போது தண்டனை பெற்றுத்தரும் அரசு, அரசியல்வாதிகள் தவறு செய்யும்போது தாமதிப்பது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பேனர்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கோரியதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.

மேலும், ’அரசியல் செயல்பாடுகளால் வழக்கு தொடர்ந்த மனுதாரரிடம் நீதிமன்றமே மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பான நடவடிக்கை குறித்து நாளை அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக உள்துறை செயலாளராத நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும்’  என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close