இனி சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது: பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமீன்!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 05:31 pm
no-more-controversial-talk-pa-ranjith-bail

ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து அவதூராக பேசியது தொடர்பாக பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பா.ராஞ்சித் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரணை மேற்கொண்டது.

அதில்,  "இனி சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, காவல்துறையினர் நீதிமன்றத்தை  அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close