நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2019 05:47 pm
south-indian-lpg-tanker-truck-owners-protest-filed-a-petition-in-the-high-court

ஜூலை 1 - ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு தடை கோரி, இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளன.

அந்த மனுவில், " இந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் 22.93 கோடி பேர் சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய சேவை சட்டப்படி வாடிக்கையாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்பிஜி சிலிண்டர் நிரப்பும், இறக்கும் இடங்களில் பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்க, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

5,400 டேங்கர் லாரிகளில் 700 லாரிகளுக்கு வேலை தரவில்லை என்று கூறி, ஜூலை 1 -ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக, தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close